திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் , அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ/மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்