வாட்ஸ் அப்பில் உலா வரும் ஆடியோ குறித்துக் கேட்டால், ''எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஆடியோ அது. அதிலிருப்பது என்னுடைய குரல் அல்ல'' என்று தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு தெரிவித்தார்..
தேனாம்பேட்டை காவல் சரகத்தில் ஆட்கடத்தல் விவகாரத்தில் மிகப்பெரிய கும்பல் ஒன்றைப் பிடித்துக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இளைஞரும், தேனாம்பேட்டை உதவி கமிஷனரும் பேசியதாக மூன்று ஆடியோக்கள் வலைதளத்திலும் வாட்ஸ் அப்பிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இது குறித்து தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகுவிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
வாட்ஸ் அப்பில் நீங்களும் இன்னொரு இளைஞரும் பேசியதாக மூன்று ஆடியோக்கள் உலா வருகின்றன. அது உங்கள் குரல் தானா?
31 வருஷம் சர்வீஸ் செய்தவர் யாராவது போனில் இப்படிப் பேசுவார்களா?
அது உங்கள் குரல் இல்லை என்கிறீர்களா?
எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. இது என் வாய்ஸ் இல்லை. அந்தக் கும்பலை 33 கோடி ரூபாய் வழக்கு போட்டேன். கார்த்திக் சேதுபதி வழக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த கும்பல் தான், அதில் ஏ ஒன் அரெஸ்ட் செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு துப்பாக்கியுடன் ராக்கெட் ராஜாவைப் பிடித்து குண்டாஸ் போட்டேன் 22-ம் தேதி அன்று.
அவர்களை நெல்லை போலீஸ் கிட்ட போய் தொட்டதே இல்லை. உயிரைப் பணயம் வைத்துப் பிடித்தோம். அவர்கள் பெரிய ஆட்கள், எல்லாவிதமான தொல்லையும் கொடுத்தார்கள். எது ஆனாலும் ஆகட்டும் என்று செயல்பட்டோம். 33 கோடி ரூபாயை மீட்க முடியவில்லை.
இவர்களைப் பிடித்து குண்டாஸ் போட்டோம் இல்லையா? அவர்கள் பெரிய அறிவாளிகள் அல்லவா? அதனால் வேலையைக் காட்டுகிறார்கள். உண்மை என்று ஒன்று இருக்கிறது. அது அதிகாரிகளுக்கு தெரியும் அல்லவா? இவர்களுக்கு எல்லாம் பயந்தால் அவ்வளவுதான். இவர்கள் மீது நானே கை வைக்கவில்லை என்றால் யாரும் கைவைக்க முடியாது. எனக்கு சர்வீஸ் முடியப் போகுது, உயிர் போனாலும் பிரச்சினை இல்லை.
உங்களைச் சந்திப்பதாக ஒருவர் பேசுகிறாரே அவர் யார்?
நான்கு பேரை குண்டாஸில் போட்டேன் அல்லவா? அவர் சுந்தரின் தம்பி. வாழ்க்கையில் அவர்களைத் தொடுவதற்கே பயந்த காலம் போய் சென்னை போலீஸ் குண்டாஸ் போட்டிருக்கிறது. மிகப்பெரிய ஆட்கள் நெல்லையில் அவர்களைத் தொடவே பயப்படுவார்கள். ஆனால் துணிச்சலாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அவருடைய அண்ணனை தூக்கப்போகிறேன் என்று ஆடியோவில் வருகிறது, தம்பிதானே பேசுகிறார்?
அவருடைய அண்ணனைத்தான் கைது செய்ய வேண்டும். அவர் தான் ஏ ஒன். இந்த வழக்கில் சம்பந்தமுள்ளது போல் பேசினால் தானே நீங்களும் நம்புவீர்கள். குரல் என்னுடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதிலுள்ள வார்த்தைகள் சம்பந்தப்படுத்தி பேசினால் தானே நம்புவீர்கள். பெரிய ஆட்களை கைவைத்தால் இப்படி நடக்கும் என்பதை உணர்த்தியுள்ளார்கள். பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான். உண்மை வெளிவந்தே தீரும்.
அதிகாரிகள் உங்களிடம் இதுபற்றிக் கேட்டார்களா?
என்னுடைய குரல் எல்லோருக்கும் தெரியும். பெரிய குரல், கணீர் என்று இருக்கும். அதிலிருக்கும் குரலுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது.
ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது சைபர் பிரிவில் புகார் எதுவும் கொடுக்க உள்ளீர்களா?
இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நமக்கு நேரம் கிடையாத. இவனை உள்ளே போட்டாச்சு. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சென்னை போலீஸ் கை வெச்சாச்சு. எனக்கு ஆண்டவன் இருக்கிறார். சென்னை கமிஷனர் ஐயா இருக்கிறார். 33 கோடி ரூபாயைத் தின்றுவிட்டு 5 ஸ்டார் ஹோட்டலில் ஜாலியாக இருப்பார்கள். இவர்களை விட முடியுமா? நாங்கள் செய்து முடித்து விட்டோம்.
31 வருடம் சர்வீஸ் செய்தவன் இவ்வளவு பெரிய திமிங்கிலத்தைப் பிடித்து உள்ளே போட்டவன் நான், இப்படியா போனில் பேசுவேன். பூ விக்கிற அம்மா கிட்டக்கூட செல்போனில் ரெக்கார்டிங் இருக்கு. அப்படி இருக்கும் போது நான் இப்படியா பேசுவேன். ஆகவே, உண்மை ஒரு நாள் வெளிவரும். சட்டம் தன் கடமையைச் செய்யும்.
இவ்வாறு தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago