சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த மே 9-ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மத்தியசேனையை சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா(48) உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரா இரு வாரத்திற்கு முன் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், நேற்று அவரும் உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago