‘தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் ரூ.290 கோடியில் அணைக்கட்டு, தடுப்பணைகளில் பணிகள்’

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறையின் அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரைசேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தைஉயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.71.86 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மேலும் 7 மாவட்டங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கும் பணி ரூ.55.36 கோடியில் மேற்கொள்ளப்படும். கடலூர் மற்றும் மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103.23 கோடியில் மேற் கொள்ளப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 7 குறு பாசன கண்மாய்களை புனரமைக்கும் பணி ரூ.4.97 கோடியில் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய நீர்ப்பாசன கட்டுமானங்களான ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் அணைக்கட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளை புனரமைப்பு செய்யும் பணி ரூ.3.07 கோடியில் மேற்கொள்ளப்படும்.

பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர்வீணாவதை தடுக்கவும் 11 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 24 அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டுமான பணிகள் ரூ.284.70 கோடியில் மேற்கொள்ளப்படும். 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வழங்கு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் போன்ற பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுநீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.116.52 கோடியில் மேற்கொள்ளப்படும்.

இதுதவிர 9 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 15 ஏரிகள் மற்றும்அதன் கட்டுமானங்கள் புனரமைப்புமற்றும் மறுசீரமைப்பு பணிகள்ரூ.69.17 கோடியில் மேற்கொள்ளப் படும். 4 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 6 நீரொழுங்கிகள் புனரமைப்பு, மறுநீரமைப்பு மற்றும் மறுகட்டுமான செய்யும் பணிகள்ரூ.25.85 கோடியில் மேற்கொள்ளப்படும். 7 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள தரைப்பாலம், பாதுகாப்பு சுவர்,கசிவுநீர் குழாய்களில் அடைப்பு நீக்குதல் மற்றும் இதர கட்டுமானங்கள், புனரமைப்பு பணிகள் ரூ.42.76 கோடியில் மேற்கொள்ளப்படும்.

நவீன நில அளவை கருவிகளை கொண்டு எல்லை கற்கள் நடும் பணி ரூ.35 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் என மொத்தம் 11 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இயற்கை வளங்கள் துறையின் அறிவிப்புகள்: புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூ.2 கோடியில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும். தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் (டாமின்) ரூ.1 கோடியில் புதிய வணிக மேலாண்மை மென்பொருள் உருவாக்கி, குவாரிகளின் செயல்பாட்டினை துல்லியமாக கண்காணிக்கவும், திறனாய்வு செய்யவும், புதிய திட்டங்களை தீட்டவும் ஏற்பாடு செய்யப்படும்.

டாமின் மூலம் வேலூர் மாவட்டம் மகிமண்டலம் சுரங்கப்பகுதியில் ரூ.7 லட்சத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும். டாமின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி கிராமத்தில் ரூ.34 லட்சத்தில் சமுதாயக்கூடமும், ரூ.24 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைத்து தரப்படும்.

டாமின் மூலம் ரூ.12 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய கண்காணிப்பு புகைப்பட கருவிகள் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு மேக்னசை நிறுவனத்தில் (டான்மேக்) ரூ.40 லட்சத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்