நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
வீட்டுவசதி துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் சீரமைப்பு பணிகள் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்படும். நகர்ப்புற பகுதிகளில் நில உரிமைஉடைய நலிவுற்ற மக்கள் தாமாகவீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின்கீழ், மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாவலூர்திட்டப் பகுதியில் ரூ.1.25 கோடியில் விளையாட்டு திடல் அமைக்கப்படும். பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் ரூ.1 கோடியில் தொழிற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
» சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன நிறுத்த கொள்கை: அமைச்சர் அறிவிப்பு
» தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் ஜூன் 25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
வாரிய திட்டப் பகுதியில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டுக்காக 2 ஆயிரம் மகளிருக்கு சிறப்புசுய தொழில் பயிற்சி வழங்கப்படும். ஈரோடு மாவட்டம் நல்லக்கவுண்டன் பாளையம் திட்டப் பகுதியில் ரூ.1.கோடியில் கடைகள்,உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago