நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

தஞ்சை மாவட்டத்தில் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை கடலோரக் காவல் படை போலீஸார் மீட்டனர்.

அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜதுரை, அதே ஊரைச் சேர்ந்த அருளானந், மைக்கேல்ராஜ் ஆகியோர் கடலுக்குச் சென்று, மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுடைய படகின் இன்ஜின் பழுதானது. உதவிக்கு யாரும் வராத நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழும கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சேதுபாவா சத்திரம் கடலோரக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் களையும், அவர்களது படகை யும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதேபோல, மல்லிப்பட்டினத் தில் இருந்து விசைப்படகில் சென்ற சேதுராமன், புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சின்னப்பன், நீலகண்டன் ஆகியோர் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுடைய படகு பழுதானது. தகவலறிந்த சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் நிலைய போலீஸார், மீனவர்கள் உதவி யுடன் கடலில் தத்தளித்த மீனவர்களையும், படகையும் மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்