துப்பாக்கி சுடும் போட்டி: 2 தங்கம் உள்பட் 11 பதக்கங்களை வென்ற தமிழக மகளிர் போலீஸார்!

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடந்த பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் போலீஸார், இரண்டு தங்கம் உள்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றனர்.

தமிழக காவல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் கமாண்டோ பயிற்சி பள்ளியில், பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.16ம் தேதியில் நடந்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, டிஜிபி சங்கர் ஜிவால், இன்று நேரில் சென்று பதக்கம் அணிவித்து பாராட்டினார். 17-ம் தேதி நடந்த 5 போட்டிகளில் தமிழக காவல்துறை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் பதக்கங்களை வென்றது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய போட்டியில் ரைபிள் சுடும் போட்டி எண். V. 300 மீட்டர் 3 பொசிஷன் நீலிங், ப்ரோன், ஸ்டாண்டிங் போட்டியில், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் எம்.ரூபாவதி முதல் இடத்தையும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் நேஹா தேவி இரண்டாவது இடத்தையும், குஜராத் காவல்துறை வீராங்கனை உதவி ஆய்வாளர் எஸ்.ஜெ. டோமர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கார்பைன் சுடும் போட்டி எண்.II, 40 கஜம் ஸ்டாண்டிங் போட்டியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் அனு ராய் முதல் இடத்தையும், கர்நாடக காவல்துறை வீராங்கனை காவலர் எல்.டி.ஷோபா இரண்டாவது இடத்தையும், ஜார்கண்ட் காவல்துறை வீராங்கனை காவலர் பிராஸ்மணி குமாரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.கார்பைன் சுடும் போட்டி எண்.III, 50 கஜம் நீலிங், குஜராத் காவல்துறை வீராங்கனை காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஜெ. டோமர் முதல் இடத்தையும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் ஸ்டான்சின் டோல்மா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் பி.கீதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கார்பைன் சுடும் போட்டி எண்.IV, 50 கஜம் ப்ரோன் ஸ்னாப் ஷூட்டிங் போட்டியில், குஜராத் காவல்துறை வீராங்கனை காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஜே. டோமர் முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் ஜகேனுர் பேகம் இரண்டாவது இடத்தையும், பிஹார் காவல்துறை வீராங்கனை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.குஜராத் காவல் துறை வீராங்கனை உதவி ஆய்வாளர் எஸ்.ஜெ. டோமர் மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம் இரண்டு தங்கம் உள்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்