சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் பேரிடர் மேலாண்மை பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
இந்த தேர்வுக்கான தொகுதியில் தற்போது தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் நெட் தேர்வுக்கான பாடத் தொகுதியில் புதிதாக பேரிடர் மேலாண்மை பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: 'யுஜசிியின் 580-வது குழுக் கூட்டம் கடந்த மே 15-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நெட் தேர்வு தொகுதியில் பேரிடர் மேலாண்மை பாடம் புதிதாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
» முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள்: ராமதாஸ் குற்றச்சாட்டு
» “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” - தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
இந்த நடைமுறை டிசம்பர் பருவத்துக்கான தேர்வில் இருந்து அமலுக்கு வரும். இதற்கான பாடத்திட்டம் யுஜியின் இணையதளத்தில் (https://ugcnetonline.in) வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago