விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் முதற்கட்டமாக 15 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 அரசு நகரபேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி 2013ம் ஆண்டு உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டுப் பயணங்களும், விபத்தும் குறையவில்லை. இதை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன.

எனவே, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படவில்லை? என்பது குறித்து தமிழக உள்துறைச்செயலர், போக்குவரத்து துறைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் அரசுப் பேருந்துகளில், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள், படியில் நின்று பயணிப்பதை தடுக்கும் நோக்கில், புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருப்பதுபோல, பழைய அரசுப் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது என்று கடந்த 11ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, விழுப்புரம் கோட்டத்தில் 735 பேருந்துகளும் கடலூர் கோட்டத்தில் 592 பேருந்துகளும், திருவண்ணாமலை கோட்டத்தில் 613 பேருந்துகளும், வேலூர் கோட்டத்தில் 657 பேருந்துகளும், காஞ்சிபுரம் கோட்டத்தில் 429 பேருந்துகளும், திருவள்ளூர் கோட்டத்தில் 249 பேருந்துகள் என 6 கோட்டங்களில் உள்ள 55 கிளைகளில் 1036 நகர பேருந்துகள் உட்பட 3275 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இவைகளில் முதற்கட்டமாக 64 தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்ட நகர பேருந்துகள் தற்போது இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று விழுப்புரத்தில் ஒரு பேருந்து விழுப்புரத்திலிருந்து பழைய கருவாட்சிக்கு இயக்கப்பட்டுள்ளது. என கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்