சிவகாசி வெடி விபத்து நிவாரணத் தொகையை தாமதிப்பது மனிதநேயமற்றது: டிடிவி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்துக்குரியது, என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்துக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் கடந்த மே 9-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்த 6 பெண்கள் உட்பட 10 அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போதுவரை அரசின் நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்காத தமிழக அரசு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் உரிய நிவாரணத் தொகையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

திமுக முப்பெரும் விழா எனும் பெயரில் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தி பெருமைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசின் தொடர் அலட்சியப் போக்கால் ஏற்படும் பட்டாசு விபத்துகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் ஏக்கமும், தவிப்பும் எப்போது புரியும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரை இழந்த அப்பாவி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிப்பதோடு, இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்