பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் முஸ்லிம்கள் நேற்று சிறப்புத் தொழுகை நடத்தினர்.

ஜாக் அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில், நாடு முழுவதும் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று துவா செய்தனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஜாக் அமைப்பின் மாநிலச் செயலாளர் அன்சாரி பிர்தவுசி, பக்ரீத் பண்டிகை தொடர்பான உரை நிகழ்த்தி, வாழ்த்து கூறினார்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்