அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து 4 பேருக்கு புகழேந்தி தரப்பு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில், பெங்களூரு புகழேந்தி, ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆட்சி அமைய, கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சியில் ஒற்றுமை வேண்டி, தங்களை சந்திக்க விரும்புகிறோம். இதை தாங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம்.

பொதுவானவர்களாக நின்று, ஒருங்கிணைக்கும் பணியில் மட்டுமே எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் ஆலோசனைகளைப் பெறவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

சசிகலா நாளை ஆலோசனை: இந்நிலையில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக சசிகலா நாளை தொண்டர்களை, போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பில் அதிமுக பிரிந்து கிடப்பதால் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதிமுகவை இணைக்கும் முயற்சியை முன்னெடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். இது அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE