அதிமுகவை காப்பாற்ற பெருந்தன்மையாக முடிவெடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. பழனிசாமி தலைமை ஏற்று சந்தித்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதிமுக பிளவுபட்டு இருப்பதே மக்களவைத் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்:

‘‘அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டு 11-வது தொடர் தோல்வியை அடையக்கூடாது. 2019-ல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக பெற்ற வெற்றியை மீண்டும் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் உள்ளது.

கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என்று சுயநலத்துடன் சிந்திக்க வேண்டாம். கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதைவிட, அதைப்பாதுகாப்பதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை அனைவரும் ஒன்றுகூடி மேற்கொள்ள வேண் டும்’’என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்