லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு @ ராஜபாளையம்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் செந்திமயில் (22) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்தி குமார் (50). இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் செந்திமயில். பி.எஸ்.சி பட்டதாரியான செந்திமயிலுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ராஜாராம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் செந்திமயில், வீட்டில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்திமயில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்