சென்னையில் தனியாக வசிக்கும் 8,965 முதியவர்கள்: பாதுகாப்பு வழங்க கமிஷனர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு





சென்னையில் தனியாக வசிக்கும் 8,965 முதியவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செய்தியா ளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில், "சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்கள் பலர் உறவினர்களாலும், கொள்ளை கும்பலாலும் கொலை செய்யப்படுகின்றனர். எனவே முதியவர்களின் பாதுகாப் புக்காக தனி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதிகளில் 665 முதியவர்களும், பூக்கடை-216, வண்ணாரப்பேட்டை-512, மாதவரம்-362, அண்ணாநகர்-612, அம்பத்தூர்-513, பரங்கிமலை-986, தி.நகர்-2489, மயிலாப்பூர்-463, கீழ்ப்பாக்கம்-719, திருவல்லிக் கேணி-348, புளியந்தோப்பு பகுதியில் 145 முதியவர்களும் தனியாக வசிக்கின்றனர். சென்னை நகரில் மொத்தம் 8,965 முதிய வர்கள் தனியாக வசிக்கின்றனர்.

இவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்து செல்வதற்காக உருவாக் கப்பட்டுள்ள 'பீட் ஆபீசர்கள்' ரோந்து செல்லும்போது, தினமும் இவர்களைச் சந்தித்து இவர்களின் பிரச்சினைகளை உடனே தீர்ப்பார்கள். தனியாக இருக்கும் முதியவர்கள் செய்ய வேண்டிய சுய பாதுகாப்பு செயல்கள் குறித்து புத்தகம் தயாரித்திருக்கிறோம். அவற்றையும் அனைவருக்கும் வழங்கியிருக்கிறோம்.

மருத்துவம் உட்பட வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும் அவர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்