சென்னை: தொலைபேசி ரகசிய உரையாடல்களை வெளியிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் 4 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தின் ரகசிய பிரிவில் சிறப்பு உதவியாளராக கடந்த 2008-ம் ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர், அங்கு இருந்த சில தொலைபேசி ஒட்டுக்கேட்பு ரகசியங்கள் அடங்கிய உரையாடல்களை திருடி சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சவுக்கு சங்கரை விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை விசாரணை நீதிமன்றம் முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. ரகசிய உரையாடல்களை பதிவு செய்த பென்-டிரைவ் சவுக்கு சங்கருக்கு சொந்தமானது. அதில் இருந்த ரகசியங்களை திருடி வெளியிட்டது அவர் தான். விசாரணை நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
எனவே, அவரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுதொடர்பாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர் தரப்பில் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago