சென்னை: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், உயிரிழந்தோரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குவைத், மங்கஃப் நகரத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குவைத் அரசோடு இந்திய வெளியுறவுத்துறை பேசி பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» ஒடிஷாவைத் தாக்கிய உள்ளூர் புயல்! | மக்களவை மகா யுத்தம்
» இனியேனும் மதிக்கப்படுமா கூட்டாட்சித் தத்துவம்? | மக்களவை மகா யுத்தம்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க குவைத் அரசு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெறும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: குவைத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். மத்திய அரசு உடனடியாக வேண்டிய அத்தனை உதவிகளைச் செய்து, தமிழர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago