சேலம் அருகே நிகழ்ந்த விபத்தில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு - முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம், பூவனூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் ( 35). கட்டிட தொழிலாளியான இவரது உறவினர் திருமணம் இன்று நடந்தது. இதற்காக லட்சுமணனும் அவரது மனைவி வேதவள்ளியும் இரு சக்கர வாகனத்தில் சுக்கம்பட்டி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தின் முன்புறம் லாரி ஒன்று சென்றது.

அப்போது சாலையில் இருந்த வேகத்தடை காரணமாக லாரி திடீரென வேகம் குறைந்தது. லாரியைத் தொடர்ந்து வந்த லட்சுமணனும் தனது இருசக்கர வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். இதேபோல், மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களும் வேகத்தைக் குறைத்தனர்.

அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் நகர பேருந்து, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இதில் வேதவள்ளியும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணும், வாலிபரும், மூன்று வயது குழந்தையும் உயிரிழந்தனர். இதனை அறிந்த வீராணம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த லட்சுமணன் உள்ளிட்ட இருவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்து குறித்து வீராணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்