சென்னை: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து காலியாக இருந்த விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago