எழும்பூர் - விசாகப்பட்டினம் உட்பட 28 சிறப்பு ரயில்கள் ஜூன் 16 முதல் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே பராமரிப்பு பணி, ரயில்களின் இயக்கக காரணங்களுக்காக, சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உட்பட 28 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08578), விசாகப்பட்டினம் - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08577), தாம்பரம் - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (06065), தன்பாத் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06066), தாம்பரம் - பீகார் மாநிலம் பாரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06061), பாரெளனி- தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06062), தாம்பரம் - மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06089), சந்திரகாச்சி - தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06090), ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட இருக்கின்றன.

மேலும், சென்னை எழும்பூர் - சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06079), சந்திரகாச்சி - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06080) உட்பட 28 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த ரயில்கள் ஜூன் 16-ம் தேதி முதல் படிப்படியாக ரத்துசெய்யப்பட உள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும். இத்தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்