தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரஜினி நிதி

By ரெ.ஜாய்சன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறிய நிலையில், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் அவர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று ரஜினிகாந்த் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி வந்த ரஜினிக்கு, விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். திறந்த காரில் நின்று கையசைத்து ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தூத்துக்குடி நகருக்குள் வரும் வழியிலும் பல இடங்களில் மக்கள் கூட்டமாக திரண்டு நின்றதை கண்ட ரஜினிகாந்த், திறந்த காரில் நின்று அவர்களை பார்த்து கைகூப்பி, கையசைத்தார். கூட்டம் அதிகமாக வந்ததால் அரசு மருத்துவமனைக்குள் அவருடன் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கண் கலங்கிய ரஜினி

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்குள் சென்ற ரஜினிகாந்த், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ஆறுதல் கூறினார்.

அப்போது அனைவரிடமும் உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்ற வார்த்தையைத் தான் கூறினார். அதிகம் பேசவில்லை. அதே நேரத்தில் உணர்ச்சிவயப்பட்டவராக காணப்பட்டார். காயமடைந்தவர்களை பார்த்தபோது ரஜினி கண் கலங்கியதாக சிகிச்சை பெறுவோர் பின்னர் தெரிவித்தனர்.

“எல்லோருக்கும் ஆறுதல் கூற ரஜினி முயன்றார். ஆனால், அவரால் இயலவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிட்டதால் அவரால் பேச முடியவில்லை. எங்களை தட்டிக்கொடுத்து உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அக்கறையாக கூறினார்” என்று சிகிச்சை பெற்றுவரும் எவுலின் விக்டோரியா மற்றும் வினோதன் ஆகியோர் கூறினர்.

ஏன் வரவில்லை?

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ராஜ் என்ற இளைஞர் கூறும்போது,, “ரஜினிகாந்த் என்னிடம் வந்தபோது, 100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்தியபோது ஏன் வரவில்லை. எல்லா தலைவர்களும் வந்தார்களே. நீங்கள் சென்னையில்தானே இருந்தீர்கள். இங்கு ஏன் வரவில்லை என கேள்வி கேட்டேன். இதற்கு எந்த பதிலையும் கூறாமல் சிரித்துக் கொண்டே ரஜினி சென்றுவிட்டார்” என்றார் அவர்.

சிகிச்சை பெறும் 2 பேருக்கு மட்டும் தலா ரூ.10 ஆயிரம் உதவித் தொகையை ரஜினி வழங்கினார். மற்றவர்களுக்கு மன்ற நிர்வாகிகள் வழங்குவார்கள் எனக் கூறிவிட்டு சென்றார். அதேபோல், உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினர் ஓட்டலுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு ரஜினியால் நிவாரண உதவி வழங்க முடியவில்லை. அவர் சென்ற பிறகு மன்ற நிர்வாகிகளே தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்