“இனி எப்போதும் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்” - அண்ணாமலை திட்டவட்டம்  @ கோவை 

By இல.ராஜகோபால்

கோவை: “இனி வாழ்வில் எப்போதும் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்,” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து இன்று இரவு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை திரும்பினார். அப்போது அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயற்சித்த போது, “இனி வாழ்வில் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்கவே மாட்டேன். பாஜக சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுகள் முறைப்படுத்தப்படும். கோவையில் கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களை நான் சந்திப்பேன். மேலும் விவரங்கள் அனைத்தையும் கட்சியின் தலைவர்கள் கூறுவார்கள்,” என்றார்.

கடந்த சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் இடையே சமூக ஊடகங்களில் கருத்து மோதல் நடந்து வரும் நிலையில், கோவையில் அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்