புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி உட்பட மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு; விசாரணை தீவிரம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், இறந்த இரு பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொதுப் பணித் துறையை கண்டித்து ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் சமூக அமைப்பினர் சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் இனி நடக்கக் கூடாது. சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுப்பணித் துறையின் செயல்பாட்டை விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மற்றும் ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ரெட்டியார்பாளையத்தில் நிகழ்ந்துள்ள விஷ வாயு உயிரிழப்புகள் வருந்தத்தக்கது. பாதாளச் சாக்கடை திட்டம் முழுமையடையும் நிலையில் உள்ளது. வீட்டுக்கு வீடு இணைப்பு தருவது நடந்து வருகிறது. இணைப்பு தரும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளது. அதனால் விஷவாயு உருவாகியுள்ளது.

இது குறித்து முழுமையாக விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தும். புதுநகரில் ஆய்வு செய்து சரி செய்யப்படும். உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற இரு பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

செந்தாமரை, செல்வராணி, காமாட்சி,

நடந்தது என்ன? - புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72). இவர் இன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

இது குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி வீட்டில் கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்தப் பகுதியில் விஷவாயு பரவுகிறதா என்பது குறித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஷவாயு பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்ற 15 வயது சிறுமியும் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை, போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் வாடிகாலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீர் வடிகாலை சரி செய்யும் வரை புதுநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டாம் என உழவர்கரை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்