காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.5 கோடியில் நோயாளிகள் உறவினர் தங்கும் அறை

By பெ.ஜேம்ஸ்குமார்

காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 5 அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.5 கோடி செலவில் படுக்கை வசதியுடன் கூடிய தனி அறை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் உள்ளூர், வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளியுடன் சிகிச்சைக்கு செல்லும் உறவினர்கள், தங்குவதற்கு மருத்துவமனையில் ஓய்வு அறைகள் எதுவும் இல்லை. இதனால் மருத்துவமனை செல்லும் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திலோ வெளிப்பகுதிகளிலோ தங்குகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு வசதியாக, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பல்வேறு மருத்துவமனைகளில் தங்கும் அறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை, திருவள்ளூர் தலைமை மருத்துவமனை, பொன்னேரி அரசு மருத்துவமனை, தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில், ஒவ்வொரு மருத்துவமனையிலும், 50 முதல் 200 பேர் தங்கும் வகையில் படுக்கை மற்றும் இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தனி அறைகள் கட்டப்பட உள்ளன.

இது குறித்து நகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ.2 கோடியிலும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் தலா ரூ.1 கோடியிலும், திருவள்ளூர் தலைமை மருத்துவமனை, பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலா ரூ. 50 லட்சத்திலும், தங்கும் அறைகள் கட்டப்படவுள்ளன. மேலும் இதற்காக டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த தங்கும் அறையை பயன்படுத்த, ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. தனியார் அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து, அந்த அறைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். முதல் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிக்கு அரசு நிதி உதவி செய்யும். மேலும் இந்த தங்கும் அறைக்கு நிதி உதவி செய்யும் தனியார் அமைப்புகளுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு தங்கும் அறையிலும் சமையல் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு பத்திய சாப்பாடு தேவைப்படுவோர் இங்கு சமைத்துக் கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்