திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் இன்று (திங்கள்கிழமை) துவங்கியது. இந்நிலையில், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு (5-வது சுற்று) கோமாரி நோய் தடுப்பூசி இன்று (ஜூன் 10) முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. பொதுவாக கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 6 மாதத்துக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
» திருப்பூர் | குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு: ஒரு குழந்தை மீட்பு
» திருப்பூர்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
அதன்படி நடப்பாண்டு இன்று துவங்கி 21 நாட்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக நேற்று முதல் வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகளுக்கும், மாநிலம் முழுவதும் பல கோடி கால்நடைகளுக்கும் இந்த தடுப்பூசியான கால்நடைத்துறையால் வழங்கப்படுகிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்திபயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை விவசாயிகள் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
அதேபோல் இந்த 21 நாட்களுக்கு பிறகு சிறப்பு முகாம் மூலமாகவும், விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago