சென்னை: தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றதற்காக, “உளமார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கும், அண்ணன் ஜான் பாண்டியனுக்கும் நன்றி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் நாம் தமிழர் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட பதிவில், “உளமார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கும், அண்ணன் ஜான் பாண்டியனுக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார். தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், சமூக வலைதளத்தில் இருவரும் கைகோர்த்திருப்பது தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago