தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 2 அரசு நகரப் பேருந்துகள் அடுத்தடுத்து அச்சு முறிந்து நடுவழியில் நின்றதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசத்துக்கு நேற்று அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கரந்தை பகுதியில் சென்றபோது, திடீரென பேருந்தின் அச்சு முறிந்து நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.
இதேபோல, அம்மாபேட்டையிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்றஅரசு நகரப் பேருந்து, காந்திஜி சாலையில் திடீரென அச்சு முறிந்து, நடுவழியிலேயே நின்றது
இதனால் அவதியடைந்த பயணிகள், அவ்வழியே வந்தவேறு பேருந்தில் ஏறிச் சென்றனர். பின்னர் தொழில்நுட்பப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பேருந்துகள் சீரமைக்கப்பட்டன.
» நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்
» இங்கிலாந்தை 36 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: ஸாம்பா அசத்தல் | T20 WC
ஏற்கெனவே அரசுப் பேருந்துகளில் பராமரிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தஞ்சையில் இரு அரசுப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago