தூத்துக்குடி: கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் திருச்செந்தூர் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் மொட்டையடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் பாஜகவின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார்.
இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். அப்படி அவர் வெற்றி பெறாவிட்டால் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விடுத்துள்ளார்.
» “அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால் திமுக ஓர் இடம் கூட வென்றிருக்காது” - தமிழிசை
» “நடு ரோட்டில் ஓர் ஆட்டை வெட்டி கொடூரம்... தரம் தாழ்ந்த திமுகவினர்!” - பாஜக காட்டம்
இந்நிலையில், தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை போட்டு கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்துள்ளார். இதனை அங்கு திரண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago