ஓபிஎஸ்-க்கு எதிராக போட்டியிட்டு 10,000 வாக்குகள்கூட பெறாத 5 பன்னீர்செல்வங்கள்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் நவாஸ்கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சைகள் என 25 பேர் போட்டியிட்டனர்.

இதில், திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 5,09,664 வாக்குகள் பெற்றார். ஓ.பன்னீர்செல்வத்தைவிட 1,66,782 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் வெற்றி பெற்றார். ஓபிஎஸ் 3,42,882 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780வாக்குகளும் பெற்றனர்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிமுகவினரும், திமுகவினரும் போட்டிபோட்டு பன்னீர்செல்வம் என்றபெயருடைய 5 பேரை சுயேச்சையாக களமிறக்கினர்.

இதில் ஒ.பன்னீர்செல்வம் என்றபெயரில் போட்டியிட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 2,981 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 572 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ,929 வாக்குகளும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 1,376 வாக்குகளும், எம்.பன்னீர்செல்வம் 2,387 வாக்குகளும் பெற்றனர். இந்த5 பன்னீர்செல்வங்களும் சேர்ந்து 9,234 வாக்குகளே பெற்றனர்.

இவர்களில் மதுரையை சேர்ந்த 3 ஒ.பன்னீர்செல்வங்கள் பெயரளவுக்கு பிரச்சாரம் செய்தனர். அதேநேரத்தில், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் மற்றும் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE