“கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளது” - வானதி சீனிவாசன்

By இல.ராஜகோபால்

கோவை: “தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல. வரலாற்று வெற்றி. சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முடிந்தது. இந்திய அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த இந்திரா காந்தியால்கூட தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை.

1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி, தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். இந்திரா மறைவுக்குப் பின் 1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த ராஜீவ் காந்தியால், இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் நடந்த, 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 244 இடங்களே கிடைத்தன. பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் நரசிம்மராவ் தலைமையில் 5 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

1989-ல் இருந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் தொடங்கியது. 2014-ல் 282, 2019-ல் 303 என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. 30 ஆண்டு களுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக கட்சி ஆட்சி அமைத்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது பெரிய சாதனை.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாக நல்லாட்சியை வழங்கும். ஏனெனில் கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை முழுமையாக 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடத்தியது பாஜக தான்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்