இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வென்றது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தயாநிதிமாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

மாபெரும் வெற்றிக்கு காரணமான தமிழக மக்களுக்கும், திமுகதொண்டர்களுக்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவைக் காப்போம்என்ற முழக்கத்துடன், பரப்புரைசெய்து வந்த திமுக தொண்டர்கள்,இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

கடந்த மக்களவை தேர்தலில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்த்து 40-க்கு 40-ஐயும் தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். அகில இந்திய அளவில், இண்டியா கூட்டணியை ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினோம்.

இந்த தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி, தங்களுக்கு யாருமே எதிரிகள் இல்லை என்ற நினைப்பில் பாஜக பிம்பத்தை கட்டமைத்தனர். ஆனால் ஆட்சியமைக்க தகுதியான இடங்களைக் கூட பெற முடியாத அளவுக்கு பாஜக தற்போது தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, கருத்துகணிப்பு என்ற பெயரில், உளவியல் ரீதியான தாக்குதல்களை பாஜக தொடுத்தது. ஆனால்,இந்த தேர்தல் முடிவு என்பது அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம், வெறுப்பு பரப்புரைகளால் மக்களை பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்புதான் எங்கள் கூட்டணியின் வெற்றி.

பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின், இந்தியஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும். கருணாநிதி நூற்றாண்டு நிறைவில், வெற்றியை அவருக்கு சமர்ப்பிப்போம் என கூறியிருந்தேன்.

இந்தியாவில் 75 ஆண்டுகளைகடந்த ஒரு மாநில கட்சியான திமுகவின் வெற்றியை, இந்த இயக்கத்தை 50 ஆண்டு காலம் கட்டிக்காத்த கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். நாளை (இன்று)இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் கூட உள்ளனர்.நானும் அக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். அதில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

‘என் உயரம் எனக்கு தெரியும்’ - சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பதிலளித்ததாவது:

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்து வார்களா?

கருணாநிதி சொன்னதைப் போல், என் உயரம் எனக்குத் தெரியும்.

தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்று தேர்தலுக்கு முன்னதாக கூறினார்களே?

காலூன்றும் போது கூறுகிறேன். தாமரை மலரும் மலரும் என்றார்களே. எப்படி மலராமல் போனதோ அதுபோன்று தான் இதுவும்.

திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்லும் என்று எதிர்பார்த்தீ்ர்களா?

நாங்கள் எதிர்பார்த்தோம். மோடி எதிர்ப்பு அலை. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் முழு அளவுக்கு எதிர்ப்பலை இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்