காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் இ.ராஜேசகர், பாமக சார்பில் வி.ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ணா பொறியில் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 3,066 வாக்களும், அதிமுக வேட்பாளர் இ.ராஜசேகர் 1,580 வாக்குகளும், பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,139 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 414 வாக்குகளும் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்த திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முன்னிலையில் இருந்து வந்தார். முதல் சுற்றில் திமுக வேட்பாளர் செல்வம் 27,662 வாக்குகளை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த இ.ராஜசேகர் 17,802 வாக்குகளையே பெற்றார்.
இதுபோல் ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் இ.ராஜேசேகர் 2-வது இடத்திலும், பாமக வேட்பாளர் வி.ஜோதி 3-வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 4-வது இடத்திலும் வந்தனர்.
6-வது சுற்றில் 50 ஆயிரத்துக்கு மேல் முன்னிலை... ஆறாவது சுற்றிலேயே திமுக வேட்பாளர் ஜி.செல்வம் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகரைவிட 59,525 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். மொத்தம் 31 சுற்றுகள் உள்ள நிலையில் 6-வது சுற்றிலேயே திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியான நிலையில் எதிர்கட்சிகளின் முகவர்கள் வேட்பாளர்கள் சோர்வடைந்தனர்.
» நெல்லை தொகுதியில் நாம் தமிழர் கட்சி செல்வாக்கு கணிசமாக உயர்வு: அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு
» பாலியல் வழக்கில் கைதான கோயில் பூசாரியின் ஜாமீன் மனு: சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவு
20 சுற்றுகளை தாண்டும்போது வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்ததால் பலர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர். ஆறாவது சுற்றில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 1,58,790 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் 99,265 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் ஜோதி 43,985 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 31,929 வாக்குகளும் பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கையி ன் முடிவில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் இ.ராஜசேகர் 3,64,571 வாக்குகளை பெற்றார். மொத்தம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,64,931 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 1,10,272 வாக்குகளையும் பெற்று அடுத்த இரு இடங்களை பிடித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago