நீலகிரி: திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தல் வாக்கு வித்தியாசத்தை கடந்தார்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தல் வாக்கு வித்தியாசத்தை கடந்தார். 17-வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் 2,06,154 வித்தியாசத்தில் ஆ.ராசா தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா 17-வது சுற்றில் 4,02,496 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 1,81,337 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,96,342 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 47,993 வாக்குகள் பெற்றுள்ளார். 17-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 2,06,154 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 11,021 வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் ஆ.ராசா அனைத்து சுற்றுகளிலும் முன்னணியில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை பின்னுக்குத் தள்ளி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்தத் தேர்தலில் கூடுதல் வித்தியாசத்துடன் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE