“2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்” - சு.வெங்கடேசன் நம்பிக்கை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் களத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இதுவரை நான்கு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சுற்றுகள் முடிவுகளில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறேன். இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருக்கிறோம்.

கடந்த முறையைவிட கூடுதலாக, இம்முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறோம். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மோடியின் மீடியாக்கள் சொன்ன உண்மையை இன்றைக்கு வாக்காளர்கள் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் தற்போது வந்து கொண்டிருக்கிற செய்தி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE