திருச்சி மக்களவைத் தொகுதியில் தீப்பெட்டி- மைக் இடையே கடும் போட்டி

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில், தபால் வாக்குகளில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்துக்கும் அதிகளவு வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பிரிக்கப்பட்ட தபால் வாக்குகளில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்துக்கும் அதிகளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. அமமுகவின் குக்கர் சின்னத்துக்கும் ஓரளவுக்கு வாக்கு பதிவாகி வருகிறது.

முதல் சுற்று முடிவு நிலவரத்துக்கு பின்பு தான் யாருக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை தெரியவரும். திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக துரை வைகோ, அதிமுக கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் உள்பட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்