வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: தமிழக மின்வாரிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

By ப.முரளிதரன்

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (ஜூன் 4) முதல் நாளை மறுதினம் (ஜூன் 5) வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை: "துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், கட்டுபாட்டு ஒருங்கிணைத்து விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (ஜூன் 4) முதல் நாளை மறுதினம் (ஜூன் 5) வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்