எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை, ஆக்கிரமிப்பு, குப்பை பிரச்சினை: உங்கள் குரலில் நோயாளிகள், பொதுமக்கள் புகார்

By செய்திப்பிரிவு

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெளியே நடைபாதை ஆக்கிரமிப்பு, சாலையைக் கடக்க வசதி குறைவு, போலீஸ் பாதுகாப்பின்மை ஆகிய வற்றால் நோயாளிகள் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

>‘தி இந்து’ அறிமுகப்படுத்தி உள்ள, ‘உங்கள் குரல்’ பிரிவின் வழியே, சென்னை எழும்பூரைச் சேர்ந்த வாசகர் ஏ.கே.ரபி, எழும்பூர் அரசு மருத்துவமனையின் அவல நிலை பற்றி கூறினார். உடனடி

யாக அங்குச் சென்று மருத்துவ மனைப் பகுதியை பார்வையிட்ட போது பல பிரச்சினைகளில் நோயாளிகள், பொதுமக்கள் அவதிப்படுவது தெரிந்தது.

எழும்பூர் ஹால்ஸ் சாலையில் உள்ள அரசு குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மனை அருகில் உள்ள நடைபாதை

களை, சமீபத்தில்தான் மாநக ராட்சி புதுப்பித்துள்ளது. பெரிய வர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் நடக்க வசதியான இந்த நடைபாதையை சிலர் ஆக்கிர மித்து கடைகள் போட்டுள்ளனர். நடைபாதையைத் தாண்டி சாலை வரை கடைகள் நீண்டுள்ளன. இதனால், மருத்துவமனை நுழைவு வாயிலை அடைவதற்கு, போக்குவரத்து நிறைந்த சாலையில் வாகனங்களுக்கு நடுவே பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து தி இந்து வாசகர் ரபி கூறும்போது, ‘இந்தப் பிரச்சினை குறித்து மாநகராட்சி, போக்குவரத்து போலீஸார், சுகாதாரத் துறை என அனைத்து பிரிவிலும் புகார் செய்து விட்டோம். புகார் கூறும் போது மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சியினர் வருவதற்குள், மாநகராட்சி ஊழியர்கள் சிலரே முன் கூட்டி தகவல் அளித்துவிடுகின்றனர். அதனால், அன்று ஒரு நாள் மட்டும் அவர்கள் கடை போடாமல் உள்ளனர். தகவல் தரும் ஊழியர்களோ, பிளாட்பாரக் கடைக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொள்கின்றனர்.’ என்றார்.

தமிழகத்தில் குழந்தை களுக்காக மட்டுமே இயங்கும் ஒரே அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைதான். தமிழகம் மட்டுமின்றி, தமிழக எல்லையில் உள்ள ஆந்திரம், கர்நாடக மக்களும் தங்கள் குழந்தைகளை இந்த மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் போது, இங்குள்ள சுகாதாரமற்ற நிலையால் கூடுதல் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, மருத்துவ மனைக்கு வந்த தாண்டவன் என்பவர் கூறும்போது, ‘நடை பாதைக் கடைக்காரர்கள் ஆக்கிர

மிப்பு செய்வதுடன், தாங்கள் விற்கும் பொருட்களின் குப்பைகள், உணவுப் பொருள் கழிவுகளை மருத்துவமனை அருகிலேயே கொட்டி விடுகின்றனர். சுகாதாரமற்ற இடத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் சாதாரண தண்ணீரை விற்கின்றனர். இதனால், ஏற்கனவே நோயுடன் வரும் குழந்தைகளுக்கு கூடுதல் நோய் ஏற்படுவதுடன், பெரியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது’ என்றார்.

மருத்துவமனைக்கு எதிரில் உள்ள நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மருத்துவ மனை முன்பு சாலையைக் கடக்க, தனியாக வெள்ளை நிற கோடுகள் அமைத்து, போக்குவரத்து போலீஸார் வசதி செய்யவில்லை. எழும்பூர் போலீஸாரும், போக்கு

வரத்து போலீஸாரும் இந்த மருத்துவமனையின் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை தொடர்பு கொண்டபோது ‘இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) சுந்தரியை போனில் தொடர்பு கொண்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை. மாநகராட்சி மன்ற 61வது வார்டு கவுன்சிலர் முகமது இம்தியாஸிடம் கேட்டபோது, ‘தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறோம். நிரந்தரத் தீர்வு காண்பது சிக்கலாக உள்ளது’ என்றார்.

மேலும், சமூக விரோத கும் பலைச் சேர்ந்த சிலர், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெற்று மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்