தாம்பரம் நகராட்சி சார்பில், பேருந்து நிலையம் அருகே தனியார் பங்களிப்புடன், ரூ. 22.74 கோடியில் ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
தாம்பரம் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் என பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகரில் சென்று வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் புதிதாக பல ஆயிரம் வாகனங்கள் தாம்பரத்தில் பதிவு செய்யப் படுகின்றன.
நகரில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப, சாலை வசதிகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படவில்லை. வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லை. வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாம்பரம் நகர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், வணிக வளாகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதி என பல பகுதிகளுக்குச் செல்வோர் தங்களது வாகனங்களைச் சாலையோரங்களில் நிறுத்திச் செல்லும் நிலையே இருந்து வருகிறது. போதிய வாகன நிறுத்த வசதிகள் எதுவும் இல்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதற்குத் தீர்வாக பல அடுக்கு (‘மல்டிலெவல்’) பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் நீண்ட நாளாக கோரி வந்தனர்.
இதனையடுத்து நகராட்சிக்கு சொந்தமான இடங்களில், வணிக வளாகத்துடன் கூடிய தானியங்கி, ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைக் கும் பணியை, தனியார் பங்களிப்பு அடிப்படையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களே அதைப் பராமரித்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர், நகராட்சி வசம் ஒப்படைப்பர். இதில், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும். இதுதொடர்பாக ஏற்கெனவே தாம்பரம் நகர மன்றத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ. 22 கோடியே 70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து அறிக்கைகளும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான ஒப்பந்தத்தில், மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் தகுதி வாய்ந்த ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைக்க, 11 மாதிரி வரைப்படங்களை அரசுக்கு சமர்ப்பித்தது. அதில் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து அரசின் அனுமதிக்கான நிலையில் திட்டம் உள்ளது. விரைவில் ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைய வேண்டும் என பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தாம்பரத்தில் ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைக்க ரூ. 22.70 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, தனியார் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிரிவாக ‘பார்க்கிங்’ அமைய வுள்ளது.
ஒரு பிரிவில் ஏழு தளங்கள் அமைகின்றது. இரண்டு கீழ் தளம், கீழ் தளம், நான்கு மேல் தளங்களும் கொண்டு அமைக்கப்படுகின்றது. இரண்டு கீழ் தளங்களில் 1,200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமையும். நான்கு தளங்களில் வணிக பயன்பாட்டுக்கு கடைகள் வாடகைக்கு விடப்படும்.
மற்றொரு பிரிவில், 11 தளங்களுடன் கூடிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. இதில் இரண்டு தளத்தில், 700 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மீதத்தில், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைகிறது. ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமையவுள்ள இடத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்க ஏதுவாக அந்தப் பகுதி யில் உள்ள கழிப்பறையின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் விரைவில், ‘மல்டிலெவல்-பார்க்கிங்’ அமைக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago