சிகிச்சை முடிந்து வைகோ வீடு திரும்பினார்

By செய்திப்பிரிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வீடு திரும்பினார். கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார்.

அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில்லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பியஅவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன.

அதை சரி செய்ய கடந்த 29-ம் தேதி அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என மருத் துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து வைகோ வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டில் ஓய்வெடுக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE