சென்னை மாவட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி ஐஏஎஸ், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராஜேஷ் குமார், எஸ்.சி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜிதேந்திரா ககுஸ்தே, எஸ்.சி.எஸ்., சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு டி. சுரேஷ் ஐஏஎஸ் ஆகியோர், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு முத்தாடா ரவிச்சந்திரா ஐஏஎஸ், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு முகமது சஃபிக் சக், எஸ்.சி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்