101-வது பிறந்த நாள்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் நாளை மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாளான நாளை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக நேற்று திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி (நாளை) திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் காலை 9 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் 9.15 மணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்