உதகை: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை காரணமாக உதகையில் கடந்த இரு வாரங்களாக குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன.
உதகையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 1) காலை முதல் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கிரீன்ஃபீல்டு மற்றும் லோயர் பஜார் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் புகுந்த நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உதகை கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. கனமழை காரணமாக, இரண்டு மணி நேரம் உதகை ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
கனமழை காரணமாக உதகையில் கடந்த இரு வாரங்களாக குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று நீலகிரி தங்க கோப்பை பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலையிலிருந்து மழை பெய்வதால் குதிரைப் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago