விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்: அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

By செய்திப்பிரிவு

விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மே 30-ம் தேதி முதல் ஜூன் 1 வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் நடைபெறும்சூழலில் தேர்தலை மனதில் வைத்துபிரதமர் மோடி திடீரென விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது என்பது அதிகார துஷ்பிரயோகம். பிரதமர் அங்கு இருக்கும் காலகட்டங்களில் விவேகானந்தர் பாறை மற்றும் பகவதியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்கக்கூடாது. வியாபாரிகளை கடைகளை மூடும்படி வற்புறுத்தக்கூடாது.

பிரதமரின் கன்னியாகுமரிவருகையின்போது நடைபெறும் அதிகார துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பாக வழக்குத் தொடர முற்பட்டபோது அதையேற்க உயர் நீதிமன்ற பதிவுத்துறை மறுத்துவிட்டது. எனவே கன்னியாகுமரிக்குவருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் காக்கும் வகையில் இதுதொடர்பாக வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும். அல்லது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், என அதில் கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்