சென்னை: சென்னை நந்தம்பாக்கம், 2-வது தெரு, ஏழுகிணறு பகுதியைச்சேர்ந்தவர் சங்கரன் (69). இவர்கடந்த 26-ம் தேதி புனித தோமையர் மலை, ஓடிஏ ருத்ரா ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் கிடந்த கவரை எடுத்துப் பார்த்தபோது, அதில் ரூ.37,500 இருந்தது.
சங்கரன் அந்தப் பணத்தை புனித தோமையர் மலை (பரங்கிமலை) காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்பணம் யாருடையது? என சம்பவ இடம் மற்றும்அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராகாட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலையோரம் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் சங்கரனின் நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவரை நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago