இஸ்ரேலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் சின்னஞ்சிறு பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப் படுகொலை அட்டூழியத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரை 36 ஆயிரம் பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 26-ம் தேதியன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் ஜூன்2-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE