கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அவிநாசி சாலையை மையப்படுத்தி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் நேற்று முன்தினம் (மே 27) ஒருவர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதைப்பார்த்த மருத்துவமனையின் பாதுகாவலாளிகள் அந்நபரை பிடித்துள்ளனர். விசாரணையில் அவர் கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜன்(38) எனத் தெரிந்தது.
இதையடுத்து மருத்துவமனை பாதுகாவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து ராஜனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜன் மயங்கி சுயநினைவின்றி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ராஜனை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜன் நேற்று அதிகாலை (மே 28)உயிரிழந்தார்.
பின்னர், மருத்துவமனை தரப்பிலிருந்து இந்த தகவல் பீளமேடு போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பீளமேடு போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய மரணம் பிரிவில் முதல் கட்டமாக பீளமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் ராஜன் அடித்துக் கொல்லப்பட்டது தெரிந்தது.
» சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை: வெளிநாட்டு விஐபிகளுக்கும் தொடர்பு?
» ஸ்ரீவில்லிபுத்தூர் முதியவர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது
இதையடுத்து பீளமேடு போலீஸார், வழக்கை கொலை வழக்காக மாற்றினர். அதைத் தொடர்ந்து 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், பாதுகாவலாளி மணிகண்டன் , ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago