மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை வசூல்: தடுக்க சல்மான் குர்ஷித் தலைமையில் குழு: உச்ச நீதிமன்றம் அமைத்தது

By எம்.சண்முகம்

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூ லிப்பதை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை வழங்க மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் மாண வர்களை சேர்ப்பதற்காக லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிப் பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

டிஎம்ஏ பை பவுண்டேஷன் மற்றும் இஸ்லாமிக் அகாடமி வழக் குகளை விசாரித்த 11 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தீர்ப் பளித்துள்ளது. ஆனாலும், நன்கொடை வசூலிப்பது குறைய வில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, தனியார் கல்லுாரிகள் நன்கொடை வசூலிப்பதைத் தடுப் பது குறித்து ஆலோசனை வழங்க முன்னாள் சட்டத்துறை அமைச் சரும், மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உத வும் வழக்கறிஞராக குர்ஷித் செயல்படுவார். அவர் கோரும் ஆவணங்கள் மற்றும் விவரங் களை மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவரது தலைமையி லான குழு இதுகுறித்து விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கு மாறு, தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளை அதிகம் கொண் டுள்ள மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்