திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலையில் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000 வழங்கக் கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும்,
மேகேதாட்டுவில் அணை கட்ட கூடாது என்பதை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் டவர் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் மலைக்கோட்டை உச்சியிலும், கோயில் வளாகத்திலும் பெரும் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago