சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 2 நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழா திருநெல்வேலியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கு முதல்கட்ட சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு நாளில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago