ராமநாதபுரம் | வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று இரவு பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் (59) பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்